ECONOMYPBTSELANGORYB ACTIVITIES

சிலாங்கூரில் வேலையில்லாதவர் விகிதாச்சாரத்தை 5 விழுக்காட்டுக்கும் கீழ்  குறைக்க எண்ணம் கொண்டுள்ளது

ஷா அலாம் நவ 16 :- சிலாங்கூர் மாநில இளைஞர் மேம்பாட்டுக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமாட் கமாருடின் ஓஸ்மான் இம்மாநிலத்தில் வேலையற்றவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அதனை 5 விழுக்காட்டுக்கும் கீழ் கொண்டுவர எண்ணம் கொண்டிருப்பதாகக் கூறினர்.

இப்பொழுது மாநிலத்தின் வேலையற்றவர்களின் விழுக்காடு 5.5 ஆக இருப்பதை இந்த ஆண்டு இறுதிக்குள் 4.5 விழுக்காடாகக்  கொண்டு வருவதற்கு, சில திட்டங்கள் உள்ளதாகவும், பெரிய அளவில் ஷா அலாமில் நடக்கவிருக்கும் ஜலாஜா சிலாங்கூர் 2020 என்னும் வேலை வாய்ப்பு சந்தையும் அதில் அடங்கும்  என்றார் அவர்.

இன்று கோலசிலாங்கூர்  மூடிய அரங்கில் நடைபெற்ற ஜலாஜா சிலாங்கூர் 2020 என்ற வேலை வாய்ப்பு நேர்காணலுக்கு வருகை புரிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியதாவது.,

இன்றைய சந்தையில்  சுமார் 90 நிறுவனங்கள் பங்குகொள்ளும் என்றும் கோம்பாக்கில் நவம்பர் 21ந்தேதி, பாயா ஜெராஸில் நவம்பர் 22, உலுலங்காட்டில் நவம்பர் 29 மற்றும் ஷா அலாமில்  டிசம்பர் 5 ந் தேதிகளில் அந்தச் சந்தைகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு வகையான  தொழில்களுக்கு விரிவுரையாளர்கள், சமய ஆசிரியர்கள், விற்பனை மேல் அதிகாரிகள், ஆய்வாளர்கள், தொழில் நிபுணர்கள் முதல் பண்டகப் பொருளாளர் வரை தேவைப்படுகிறது
என்ற அவர்.

இந்த வேலை வாய்ப்பு சந்தையில் கலந்துகொள்ள முன்கூட்டியே இணையம் வழி http://nfdot.com/ereg/views/jobfair, முக நூல் Pusat jobs Malaysia Selangor, படவரி jobs Malaysia selangor தொலைத்தொடர்பு எண் 55247740 அல்லது 03-55231309 மூலமும் பதிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்,

மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாநில அரசுக்குத் திருப்தி  அளிக்கவில்லை, என்றும் அடுத்த ஆண்டும் இன்னும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பல்வேறு  முயற்சிகளை தாங்கள் எடுத்து வருவதாகவும் கூறிய அவர் கூறினார்.


Pengarang :