ECONOMYNATIONALSELANGOR

டோப் கிளவ்  நிறுவன ஊழியர் தங்கும் விடுதியில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

ஷா ஆலம், நவ 16- கிள்ளானில் உள்ள டோப் கிளவ் கையுறை தயாரிப்பு தொழிற்சாலையின் ஊழியர் தங்கும் விடுதியில் நாளை தொடங்கி வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (இ.எம்.சி.ஒ.) அமல்படுத்தப்படும்.

அந்நிறுவனத்தின் தங்கும் விடுதியில் உள்ள 13,190 ஊழியர்கள் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 1,200 குடியிருப்பாளர்களை அந்த கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை உள்ளடக்கியிருக்கும் என்று பாதுகாப்புக்கான மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

தங்கும் விடுதியில் உள்ள ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு விரிவான அளவில் கோவிட்-19 நோய்த் தொற்றுச் சோதனை நடத்துவதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

அந்த தொழிற்சாலை தொடர்ந்து செயல்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு அதன் பணியாளர்கள் மற்றும் தங்கும் விடுதியில் உள்ளவர்கள் மீது கோவிட்-19 சோதனை மேற்கொள்ளும்படி அதன் நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்,

 


Pengarang :