NATIONALPENDIDIKANSELANGOR

முதலாம் படிவ மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் – யாயாசான் சிலாங்கூர் வழங்குகிறது

ஷா ஆலம், நவ 26 – முதலாம் படிவ மாணவர்களுக்கு 700 வெள்ளி முதல் 1,000 ,வெள்ளி வரையிலான உபகாரச் சம்பளத்தை யாயாசான் சிலாங்கூர் அறவாரியம் வழங்க முன்வந்துள்ளது.

இந்த உபகாரச் சம்பளம் 2021 ஆம் ஆண்டிற்கான சிறப்பு கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதாக யாயாசான் சிலாங்கூர் அறவாரியத்தின் கல்விப் பிரிவு முதன்மை இயக்குநர் ஸஹூரா ஜக்ரி கூறினார்.

இத்திட்டத்தில் பங்கேற்க 420 மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறிய அவர், வரும் டிசம்பர் மாதம் முதல் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை இணையம் வாயிலாக இதற்கான விண்ணப்பத்தை செய்யலாம் என்றார்.

இந்த உபகாரச் சம்பளம் இரு தவணைகளில் வழங்கப்படும். இது தவிர, மாணவர்களுக்கு உதவும் வகையில் கூடுதல் வகுப்புகளும் தன்முனப்பு பயிற்சிகளும் நடத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கல்வியமைச்சின் ஒத்துழைப்புடன் கடந்த 1971 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் கிராமப் புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

இந்த உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் சிலாங்கூரில் பிறந்தவர்களாக அல்லது பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

அதேசமயம், விண்ணப்பதாரர்களின் குடும்ப வருமானம் சராசரி 2,000 வெள்ளியாக இருப்பது அவசியம்.

விண்ணப்பதாரர்கள் http://yayasan selangor.org.my/ என்ற இணையதளம் வாயிலாக இந்த உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பம் செய்யலாம். மேல் விபரங்களுக்கு 03-76691218, 03-76691158, 03-76691177 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :