ECONOMYPBTSELANGOR

சுணக்கம் கண்ட ரவாங்-பத்தாங் பெர்ஜூந்தை சாலை மேம்பாட்டு பணிகள் மீண்டும் தொடக்கம்

ஷா ஆலம், டிச 5- குத்தகையாளரின் பலவீனம் காரணமாக கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் முதல் கைவிடப்பட்ட ரவாங்-பத்தாங் பெர்ஜூந்தை சாலையை தரம் உயர்த்தும் பணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டார் கண்ட்றி ஹோம் சாலை சந்திப்பு முதல் கோல சிலாங்கூர் எல்லை வரையிலான அந்த சாலையை சீரமைக்கும் பணிகளை புதிய குத்தகையாளர் கடந்த அக்டோபர் மாதம் முதல் முழுவீச்சில் மேற்கொண்டு வருவதாக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.

சுமார் மூன்றரை கோடி வெள்ளி மதிப்பிலான இந்த திட்டத்தை 18 மாதங்களில் முடிப்பதற்கு ஏதுவாக புதிய குத்தகையாளரை பொதுப்பணித்துறை நியமித்துள்ளது என்று அவர் சொன்னார்.

ஆற்றின் கரைகளை மேம்படுத்துவது மற்றும் கம்போங் சுங்கை பாக்காவ், ஜாலான் சவுஜானா ரவாங் ஆகிய பகுதிகளில் உள்ள குறுகலான சாலைகளை விரிவுபடுத்து ஆகிய பணிகளையும் புதிய குத்தகையாளர் மேற்கொள்வார் என்றார் அவர்.

இந்த திட்டத்தை புதிய குத்தகையாளர் தொடங்குவதற்கு முன்னர் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் சாலையை தரம் உயர்த்தும் பணிகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நடவடிக்கையின் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் இதர பணிகள் மேற்கொள்ளப்படுவதற்குரிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :