SELANGORUncategorized

முன்னால்  துணை வேந்தரான  உங்கு  அஜீஸ் மறைவுக்கு  மந்திரி புசார்  அனுதாபம்.

ஷா ஆலம் டிச 15;-மலாயா பல்கலைக்கழகத்தின் முன்னால்  துணை வேந்தரான  உங்கு அப்துல் அஜீஸ் அவரின்  98 வது வயதில் முதுமை காரணமாக மூச்சுத்திணறி இன்று  15-12- 2020 மாலை 4.00 மணிக்குக்  கோலாலம்பூர்  பிரின்ஸ் கோர்ட்  மருத்துவ மனையில்  மறைந்து விட்டார் என்ற சோகச்  செய்தியைப் பெற்ற சிலாங்கூர்  மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ  அமிருடின் ஷாரி தனது ஆழ்ந்த அனுதாபத்தை  அன்னார் குடும்பத்தினருக்குத் தெரிவித்துக் கொண்டார்.

உங்கு அப்துல் அஜீஸை ஒரு கல்வி பிரமுகர் என்றும்,நாட்டுக்கும்  மக்களுக்கும் நிறையப் பங்களிப்பு செய்தவர் என்றும், தாபூங் ஹாஜி, என்று  இஸ்லாமிய யாத்திரிக வாரியத்தை  நிறுவுவதில் ஈடுபட்ட நபர்களில்  முக்கிய ஒருவர் என்றும் நாட்டுக்கு நிறையப் பாடுபட்ட ஒரு நபரை நாடு இழந்துவிட்டது  அவரின்  பணியைப் புகழ்ந்துரைத்தார்  மந்திரி புசார்.

உங்கு அப்துல் அஜீஸின் சடலம் அல் தக்வா மசூதிக்குக் கொண்டு செல்லப்பட்டு இன்று இரவு அடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து லண்டனில் 1922 ஜனவரி 28 ம் நாள் அன்று பிறந்த உங்கு அப்துல் அஜீஸ் மிகவும் மதிப்பிற்குரியவர். கல்வி மற்றும் பொருளாதாரத்தை கற்ற  நபராக உங்கு அஜீஸ் அத்துறைகளில்  மேம்படுத்துவதற்காக, குறிப்பாக மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு  நல்ல பல நடைமுறை யோசனைகளை வழங்கியுள்ளார்  என்ற ரீதியில்  நாட்டில் பெரிதும் மதிக்கப்படுபவர்.


Pengarang :