ECONOMYNATIONALSELANGOR

2021 ம் ஆண்டுக்கான பட்ஜெட் நிறைவேறியது

கோலாலம்பூர்., டிச 15- இன்று நாடாளுமன்றம் 2021 ம் ஆண்டுக்கான வரவு செலவு பட்ஜெட்டைக் குறுகிய பெரும்பான்மையில் நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் இன்று மூன்றாம் வாசிப்புக்குத் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், நிறைவேறுமா? நாட்டில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி மலேசிய மக்களிடம் இருந்தது.

மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப் பட்டப் பட்ஜெட் பிஎன் மற்றும் பாரிசான்  கூட்டணிகளின் 111 வாக்குகளைப் பெற்று நிறைவேறியது. பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினின்  அரசாங்கம் மேலும் ஒரு  இடரை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாகப் பல அரசியல் பார்வையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அந்த பட்ஜெட் மலேசிய மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கவில்லை என்று அமானா, ஜ.செ.க, பிகேஆர் கூட்டணிகளுடன் சபா வாரிசான் கட்சியின் உறுப்பினர்களும், துன் மகாதீரின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதனை நிராகரித்தனர். ஆனால் எதிர்ப்பாளர்கள் சேர்ந்து 108 வாக்குகளை மட்டுமே திரட்ட முடிந்த வேளையில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினின் ஆதரவு கட்சிகள் 111 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது..

 


Pengarang :