ECONOMYSELANGORYB ACTIVITIES

ஹிஜ்ரா நிதி 56,000 தொழில் முனைவோர்களைத் தோற்றுவித்துள்ளது

சபா பெர்ணம், டிச22: ஆறு ஆண்டுகளில் 56,000 தொழில் முனைவோரைத் தோற்றுவிப்பதில் யாயசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) வெற்றி பெற்றுள்ளது.

ரிங்கிட் 244 மில்லியன் கடன் ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி 2015 ஆம் ஆண்டில் இந்த முயற்சி தொடங்கப் பட்டது என்று தொழில் முனைவோர் மேம்பாடு ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது.

பல தொழில்முனைவோர் ஏற்கனவே அவரவர் தொழில்களில் வெற்றிகரமாக உள்ளனர். எனவே, அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால் அவர்களின் வெற்றிக் கதையைச் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

இதுபோன்ற வெற்றிக் கதைகள் மூலம், எதிர்காலத்தில் தொழில்முனைவோராக மாற அதிகமான மக்கள் தூண்டப்படுவார்கள். உண்மையில், ஹிஜ்ரா அவர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறது, ”என்று வீடமைப்பு, நகர்ப்புற நல்வாழ்வு மற்றும் தொழில் முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினராக ரோட்சியா இஸ்மாயில் .நேற்று இங்கு சிலாங்கூர் ஹிஜ்ரா வெற்றியை நினைவு கூறும் நிகழ்ச்சியின் போது கூறினார்.

அவர் மேலும் பேசுகையில் இன்றைய நிகழ்வுக்கு சிலாங்கூர் முழுவதும் 20 கிளைகளில் இருந்து மொத்தம் 66 தொழில் முனைவோர் ஹிஜ்ரா வெற்றி பயணத் திட்டம் 2020 தில் பங்கேற்கப் பரிந்துரைக்கப்பட்டு, அவர்களில் 21 பேர் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர் என்றார் அவர்.

அனைத்துத் தொழில் முனைவோரும் ஹிஜ்ராவிடமிருந்து பாராட்டு சான்றுகள் மற்றும் பரிசு கூடைகளை பெற்றனர்.


Pengarang :