Mohd Khairuddin Othman ketika sidang media pembukaan Persiaran Shorea di Elmina, Shah Alam pada 10 September 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
PBTSELANGORYB ACTIVITIES

வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காண பாயா ஜெராஸ் சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை

ஷா ஆலம், டிச 28–  பாயா ஜெராஸ் சட்டமன்ற தொகுதியில் உள்ள பாரம்பரிய கிராமங்களில் ஏற்பட்டு வரும் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியில் தொகுதி உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் புத்தாண்டில் தீவிர கவனம் செலுத்தவிருக்கிறார்.

கம்போங் குபு காஜா, கம்போங் மெர்பாவ் செம்பாக், கம்போங் சுங்கை புளோங் ஆகிய கிராமங்கள் கடுமையான வெள்ளப் பிரச்னையை எதிர் நோக்கி வருவதாக அவர் சொன்னார்.

வெள்ளப் பிரச்னை மீண்டும் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்வதற்காக வடிகால் முறையை சீரமைக்கும் அதேவேளையில் கால்வாய்களையும் விரிவுபடுத்தவுள்ளோம். மேலும், தேவையின் அடிப்படையில் வெள்ள நீர் சேகரிப்பு குளங்களையும் அமைக்கவிருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இத்திட்டங்கள் மீது புத்தாண்டில் தீவிர கவனம் செலுத்தப்படும். சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் வரை அப்பகுதி மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த வெள்ளத் தடுப்பு திட்டத்தை மேற்கொள்வதில் ஷா ஆலம் மாநகர் மன்றம், வடிகால்,நீர் பாசனத்துறை மற்றும் பொது பணி இலாகா ஆகிய தரப்பினர் ஒத்துழைப்பு நல்கி வருவதாகவும் அவர் கூறினார்.

 

 


Pengarang :