NATIONALPBTSELANGOR

கோவிட்-19 நோயாளிகளுக்காக 2,000 கட்டில்களை பொருத்துவதில் சிலாங்கூர் ஊராட்சி மன்றங்கள் உதவி

ஷா ஆலம், டிச 28– மேப்ஸ் எனப்படும் செர்டாங் கண்காட்சி மற்றும் வர்த்தக மையத்தில் இயங்கி வரும் கோவிட்-19 நோயாளிகள் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் மையத்தில் 2,000 கட்டில்களை பொருத்தும் பணியில் சிலாங்கூரிலுள்ள ஊராட்சி மன்றங்களைச் சேர்ந்த 125 பணியாளர்கள் ஈடுபட்டனர்.

சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் (27 பணியாளர்கள்), ஷா ஆலம் மாநகர் மன்றம் (20 பணியாளர்கள்), கிள்ளான் நகராண்மைக்கழகம் (17 பணியாளர்கள்), காஜாங் நகராண்மைக்கழகம் (15 பணியாளர்கள்), சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம் (8 பணியாளர்கள்), கோல லங்காட் நகராண்மைக்கழகம் (3 பணியாளர்கள்) ஆகிய ஊராட்சி மன்றங்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில தகவல் இலாகா கூறியது.

ஊராட்சி மன்றங்கள் தவிர்த்து மெர்சி மலேசியா, டீம் சிலாங்கூர், அரிப் சிலாங்கூர், சிலாங்கூர் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு மற்றும் மாநில அரசு தலைமையக ஊழியர்களும் தன்னார்வ அடிப்படையில் இப்பணிக்கு உதவுகின்றனர் என்று அத்துறை தெரிவித்தது.

அந்த 2,000 கட்டில்களும் காலை மணி 9.00 தொடங்கி இரவு 11.00 மணிக்குள் பொருத்தி முடிக்கப்பட்டன.


Pengarang :