ECONOMYNATIONALSELANGOR

வேண்டாம் இன்னொரு பொது முடக்கம்- வர்த்தக சங்கம் கோரிக்கை

ஷா ஆலம், ஜன 8– மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படும் பட்சத்தில் பல வர்த்தக ஸ்பானங்கள் மூடப்படும் சூழ்நிலை ஏற்படும் என்பதோடு நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும் என மலேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் சங்கம் எச்சரித்துள்ளது.

இன்னொரு முறை பொது முடக்கம் அமலுக்கு வந்தால்  தற்போது  தள்ளாடிக் கொண்டிருக்கும் வர்த்தகங்கள்  முழுமையாக கொல்லப்பட்டு விடும் என்று அச்சங்கத்தின் துணைத் தலைவர் சின் சீ சியோங் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மலேசிய உற்பத்தியாளர் சம்மேளனமும் இதே  போன்ற கோரிக்கையை நேற்று விடுத்திருந்தது. கடுமையான நிர்வாக நடைமுறைகளின் கீழ் வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று அது கேட்டுக் கொண்டது.

கடந்தாண்டு மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட முழுமையான பொது முடக்கம் போலன்றி கடுமையான விதிமுறைகள் மற்றும் பயணக்கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படுவதை தாங்கள் வரவேற்பதாக அந்த சம்மேளனத்தின் தலைவர் டான்ஸ்ரீ சோ தியான் லாய் கூறினார்.

உயிர்களைக் காப்பதையும் வாழ்வாதரத்தைக் காப்பதையும் சமமான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்ற போதிலும் முழுமையான பொது முடக்கம் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு பேராபத்தாக முடியும் என்பதோ ஆள் குறைப்பை செய்ய வேண்டிய நிர்பந்தமும்  முதலாளிகளுக்கு ஏற்படும் என்றார் அவர்.

 

 


Pengarang :