SELANGORYB ACTIVITIES

பொங்கல் திருநாளை மிதமான அளவில் கொண்டாடுவீர்- கணபதிராவ் வேண்டுகோள்

ஷா ஆலம், ஜன 13- பொங்கல் திருநாளை குடும்ப உறுப்பினர்களுடன் மிதமான அளவில் கொண்டாடும்படி சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு அமலாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றி அடக்கமான முறையில் இத்திருநாளைக் கொண்டாடுவது அவசியமாகும் என்று அவர் சொன்னார்.‘

நாடு பெருந்தொற்றினால் பாதிக்கப்படுள்ள வேளையில் முற்றிலும் மாறுபட்ட சூழலில் இந்த பொங்கல் திருநாள் இவ்வாண்டில் கொண்டாடப்படுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய்த் தொற்று காரணமாக சில மாநிலங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட அவர், இந்நாட்டிலுள்ள பல்வகைத் தன்மையை போற்றும் அதேவேளையில் அதற்கு மதிப்பும் அளிக்கும்படி அனைத்து மலேசியர்களையும் கேட்டுக் கொண்டார்.

பல இன சமயங்களையும் தனித் தனி கலாசாரம், பாரம்பரியம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளையும் கொண்ட நாட்டில் வாழ்வதில் நாம் உண்மையில் அதிர்ஷ்டசாலிகளாக விளங்குகிறோம். இதுவே பல்லின நாட்டிற்கு வலுவமான அடித்தளமாகவும் விளங்குகிறது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

பொங்கல் திருநாளின் மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் அதேவேளையில் எஸ்.ஒ.பி. நடைமுறையைப் பின்பற்றுவதில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :