A mobile x-ray machine (vehicle-L) scans through a Malaysian lorry at the Woodlands immigration checkpoint leading to Johor Bharu from Singapore, 16 April 2002. Illegal immigrants and smugglers will have to find more creative ways of slipping past Singapore’s immigration checkpoints after the city-state deployed mobile x-ray systems (MOBIX) to scan incoming vehicles. AFP PHOTO/STRAITS TIMES (Photo by WONG KWAI CHOW / STRAITS TIMES / AFP)
NATIONAL

பொது முடக்க காலத்தில் வர்த்தக வாகனங்களுக்கு அனுமதி கடிதம் தேவையில்லை- போக்குவரத்து அமைச்சு  அறிவிப்பு

கோலாலம்பூர், ஜன 13- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் வர்த்தக வாகனங்கள் செயல்படுவதற்கு போக்குவரத்து அமைச்சின் அனுமதிக் கடிதம் தேவையில்லை என்று அவ்வமைச்சு அறிக்கை ஒன்றின் வழி கூறியது.

பொது முடக்க காலத்தில்  வர்த்தக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படாது என்றும் அது தெரிவித்தது.

சாலை தடுப்புச் சோதனைகளில் வர்த்தக வாகனங்களுக்காக சிறப்புத் தடங்கள் உருவாக்கப்படும். அமலாக்க அதிகாரிகள் மேற்கொள்ளும் சோதனையின் போது முதலாளிகள் வழங்கிய உறுதிக் கடிதங்களைக் காட்டினால் போதுமானது என்று போக்குவரத்து அமைச்ச தெளிவுபடுத்தியது.

சங்கங்களில் பதிவு செய்துள்ள கிடங்குகளுக்கு பொருள்களை அனுப்பும் சேவையில்  ஈடுபட்டுள்ள போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் சார்ந்த சங்கத்தின் அனுமதிக் கடிதத்தை காட்டினால் போதுமானது.

சங்கங்கள் அல்லது அரசு சாரா அமைப்புகளில் பதிவு செய்யாத நிறுவனங்கள் https://application.mot.gov.my/. என்ற அகப்பக்கம் வாயிலாக அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.

பயணிகளை ஏற்றிச் செல்லும் பொது போக்குவரத்து வாகனங்கள் தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள கூடல் இடைவெளியைக் கடைபிடித்தல் உள்ளிட்ட கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Pengarang :