ALAM SEKITAR & CUACASELANGORYB ACTIVITIES

பண்டார் உத்தாமா தொகுதியில் சுற்றுசூழலை பாதுகாக்க வெ.109,000 ஒதுக்கீடு

பெட்டாலிங் ஜெயா, பிப் 10- பண்டார் உத்தாமா  சட்டமன்றத் தொகுதியில் நீடித்த சுற்றுசூழலை பாதுகாப்புத் திட்டங்களை மேற்கொள்ள ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த உதவித் தொகை குடியிருப்பாளர் சங்கங்கள், ருக்குன் தெத்தாங்கா அமைப்புகள், கூட்டு நிர்வாக மன்றங்கள் உள்பட 23 அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

பண்டார் உத்தாமா பசுமை மானியத் திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறிய அவர், இப்பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய அணுக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

இந்த திட்டத்தின் வாயிலாக இதுவரை சமூக பயிரீட்டுத் திட்டம், மறுசுழற்சி சூரிய சக்தி வாயிலாக மின் உற்பத்தி உள்ளிட்ட  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பண்டார் உத்தாமா பகுதியிலுள்ள முதிர்ந்த மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை நடும் பணி மேற்கொள்ளப்படுவதாகவும் இதுவரை 40 புதிய மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :