EVENTMEDIA STATEMENTNATIONAL

கூட்டரசு நீதிமன்றத்தை அவமதித்ததாக சார்ல்ஸ் சந்தியாகோ மீது போலீஸ் புகாரா?

கிள்ளான், பிப் 22 ;-  மலேசியாகினி இணைய செய்தித்தளத்தைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, ரிம 500 ,000 அபராதம் விதித்த கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவைப் பற்றி தான் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து தனக்கு எதிராக போலீஸ் புகார்கள் செய்யப் பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது  என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்தார்.

மத்திய அரசியலமைப்பின் 10 வது பிரிவின் படி, எனக்கும் சரி, இந்நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் சரி, சுதந்திரமான பேச்சுரிமை  மற்றும் கருத்து வெளிப்படுத்தும் உரிமை வழங்கியுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியம். ஆகையால், நான் எனது அடிப்படை உரிமையைப் பயன்படுத்துகிறேன்.

அப்படியானால், இத்தருணத்தில், தீர்ப்பைப் பற்றிய எனது கருத்துகளையும் கவலைகளையும் எந்தவொரு அவமதிப்பிற்கும் போலீஸ் புகார்களுக்கும் அஞ்சாமல்,  நான் வெளிப்படுத்த உரிமை உள்ளது என பொருள்படும்.

மத்திய நீதிமன்றத்தின் முடிவு ஒருமனதாக இல்லை. அதில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அதே வேளையில், மத்திய நீதிமன்றத்தின் தீர்ப்பு தலைகீழாக மாற்றப் பட்டுள்ளது  என்பதை நினைவில் கொள்வது மிக அவசியம். நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்,சட்டமியற்றுபவர் என்ற முறையில், இப்போது  பேச வேண்டியது எனது கடமை.

ஒருவர் மீது போலீஸ் புகார் செய்யப்படுவது என்பது இந்த நாட்டில் வேகமான வளர்ந்து வரும்  கலாச்சாரமாகி விட்டது.

அதைவிடுத்து, தற்போது மலேசியா மற்றும் அதன் மக்கள் எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சனைகளை நாம் கவனிக்க வேண்டும் என நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால் விசாரணைக்கு என்னை அழைத்தால் எனது முழு ஒத்துழைப்பையும் நான் வழங்குவேன் என்றார் சார்ல்ஸ் சந்தியாகோ.

 


Pengarang :