ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTSELANGOR

போதைப் பொருள் அபாயத்திலிருந்து சுங்கை ரமால் மீளவேண்டும்- சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

காஜாங், பிப் 24– சுங்கை ரமால் பகுதியிலுள்ள போதைப் பொருள் புகலிடங்கள் மீது தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனம் (ஏ.ஏ.டி.கே.) இம்மாதம் 20ஆம் தேதி அதிரடிச் சோதனையை மேற்கொண்டது.

சிலாங்கூர் மாநிலத்தில் போதைப் பொருள் தொடர்பான சம்பவங்கள் அதிகம் பதிவான மாவட்டமாக உலு லங்காட் விளங்குவதன் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுங்கை ரமால் சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான் ஜோஹார் கூறினார்.

இது போன்ற சோதனை நடவடிக்கைகள் கடந்த காலங்களிலும் மேற்கொள்ளப்பட்டன. இருந்த போதிலும் போதைப் பொருள் ஆதிக்கம் பழைய நிலைக்கே திரும்பி விட்டது. ஆகவே, இவ்விவகாரத்திற்கு ஆக்ககரமான மற்றும் தீர்க்கமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் எனத் தாங்கள் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

தீய சக்திகளின் பிடியிலிருந்து இப்பகுதியை மீட்பதற்கு தாமும்  பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஓங் கியான மிங்கும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சொன்னார்.

இந்த போதைப் பொருள் தடுப்புச் சோதனையில் உலு லங்காட் ஏ.ஏ.டி.கே., ரயில்வே எசட்ஸ் கார்ப்ரோஷன், உலு லங்காட் மாவட்ட மன்றம், காஜாங் நகராண்மைக்கழகம், போலீஸ் மற்றும்  இராணுவ சேமப்படையைச் சேர்ந்த 150 உறுப்பினர்கள் பங்கு கொண்டனர்.


Pengarang :