MEDIA STATEMENTNATIONALPress Statements

மார்ச் மாதத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இல்லை

கோலாலம்பூர், மார்ச் 1: கடந்த புதன்கிழமை, இஸ்தானா நெகாரா ஒரு அறிக்கையில் யாங் டி-பெர்த்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, அவசர காலங்களில் நாடாளுமன்றம் அமர முடியும் என்ற கருத்தை வெளிப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து, இம்மாதம் 8 ந்தேதி டேவான் ராயாட் எனப்படும் நாடாளுமன்ற மக்களவை அமர்வுக்கு சாத்தியமிருப்பதாக  சில ஊடகங்கள் அறிவித்திருப்பது, நாடாளுமன்ற அசல் அமர்வுக்கான அட்டவணையில் கண்டுள்ள தேதிகளின் அடிப்படையிலாகும்.

ஆனால் அது அவசர ஆணை காலம் அமலுக்கு வருவதற்கு முன் உள்ள  நாடாளுமன்ற அட்டவணை என்பதால் இனி அந்த தேதிகள் பொருந்தாது என்று டேவான் ராயாட் துணை சபாநாயகர் டத்தோ மொஹமட் ரஷீத் ஹஸ்னன் தெரிவித்தார்.

அவசர கால விதி பிரிவு 14 (1) (ஆ) மூலம் ஒரு நாடாளுமன்ற அமர்வுக்கு நாடாளுமன்றத்தை அழைக்க யாங் டி-பெர்த்துவான் அகோங்கிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது,  அதாவது மாமன்னர், பிரதமரின் ஆலோசனைப்படி அத்தகைய தேதிகளில் நாடாளுமன்றத்தை அமர்வுக்கு அழைக்கவோ, கலைக்கவோ அவசியம் எனக் கருதினால்.

அப்படியென்றால் மற்றொரு விஷயமும் செய்யப்பட வேண்டும்,  மக்களவை செயலாளர் மூலம் எம்.பி.களுக்கு 28 நாட்களுக்கு முன்பே அழைப்பு விட வேண்டும், என்ற விதியையும் நினைவில் கொள்ள வேண்டும்” என்று அவர் தனது டுவிட்டர் கணக்கு மூலம் விளக்கினார்.

 

 

 


Pengarang :