PBTSELANGOR

வாகன நிறுத்தமிட கட்டண முறை அடுத்தாண்டு இலக்கவியலுக்கு மாற்றம்

ஷா ஆலம், மார்ச் 9– அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் தேதி தொடங்கி சிலாங்கூர் முழுவதும் உள்ள ஊராட்சி மன்றங்களில் வாகன நிறுத்துமிடங்களுக்கான கட்டணம் செலுத்தும் முறை முழுமையாக இலக்கவியலுக்கு மாற்றப்படும்.

ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் (எஸ்.எஸ்.பி.) எனப்படும் இந்த கட்டண முறை புதிய செயலியின் வாயிலாக அமல்படுத்தப்படும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இந்த புதிய கட்டண முறைக்கு வழி விடும் வகையில் தற்போது நடப்பிலுள்ள கூப்பன் முறை இவ்வாண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் அகற்றப்படும் என்றும் அவர் சொன்னார்.

கைப்பேசிகளில் இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய இந்த ஒருங்கிணைந்து கட்டண முறை பல்வேறு ஊராட்சி மன்றங்களில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

தைப்பேசியைக் கொண்டிராத வாகனமோட்டிகளுக்கான மாற்றுத் திட்டமாக ஏஜெண்ட் இ-பார்க்கிங் எனும் முறை மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் எனினும், இது இன்னும் இறுதிக்கட்டத்தை எட்டவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த விவேக கார் நிறுத்தக் கட்டண முறை கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. இது கோலாலம்பூர் மாநகர் மன்றம் உள்பட பல்வேறு ஊராட்சி  மன்றங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.


Pengarang :