SELANGORWANITA & KEBAJIKAN

மரண சகாய நிதி விண்ணப்பங்களுக்கு விரைவாக அங்கீகாரம்- பொதுமக்கள் மனநிறைவு

கோம்பாக் மார்ச் 10- மரண சகாய நிதிக்கான விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்படுவது குறித்து எஸ்.எம்.யு.இ. எனப்படும் மூத்த குடிமக்கள் உதவித் திட்ட பயனாளர்கள் மனநிறைவு தெரிவித்தனர்.

தனது தாயாருக்கான  உதவி விண்ணப்பம் ஒரு மாதத்திற்கு குறைவான காலத்தில் அங்கீகரிக்கப்பட்டது கண்டு தாம் வியப்படைந்த தாக சுரேஷ் காளிதாசன் (வயது 46) கூறினார்.

முன்பு தன் தந்தை மறைந்த போது மரண சகாய நிதிக்கு தாயார்தான் விண்ணப்பிப்ப வேண்டும் என்று டுசுன் துவா சட்டமன்றத் தொகுதி சேவை மையத்தின் அதிகாரி தம்மிடம் கூறியதாக அவர் சொன்னார்.

இந்த திட்டத்தின் கீழ் ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வாயிலாக பயன்பெற முடிகிறது. அதே சமயம்  இத்திட்டத்தில் பங்கேற்றவர்கள் காலமானால் அவர்களின் வாரிசுகளுக்கும் மரண சகாய நிதி வழங்கப்படுகிறது என்றார் அவர்.

கடந்த ஜனவரி மாதம் மறைந்த தன் தாயாரின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்கு சிலாங்கூர் மாநில அரசினால் வழங்கப்பட்ட மரண சகாய நிதி தங்களுக்கு பெரிதும் துணை புரிந்ததாக வி.எஸ். லுர்துமேரி (வயது 57) கூறினார்.

இந்த உதவியை வழங்கியதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மறைவுக்குப் பின்னரும் சம்பந்தப்பட்டவரின் வாரிசுகளுக்கு உதவும் வகையில் இந்த  திட்டத்தை அமல்படுத்தி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள தாமான் ஜாசா உத்தாமாவில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில்  நடைபெற்ற மரண சகாய நிதி வழங்கும் நிகழ்வின போது செய்தியாளர்களிடம் அவர்கள் இவ்வாறு கூறினர்.

ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுத் திட்டம் மற்றும் 500 வெள்ளி மரண சகாய நிதி ஆகிய இரு திட்டங்களை உள்ளடக்கும் வகையில் மூத்த குடிமக்கள் உதவித் திட்டம் மேம்படுத்தப்படுவதாக மந்திரி புசார் கடந்த ஜனவரி மாதம் கூறியிருந்தார்.

பொது மக்கள் e-mesra.yawas.my எனும் அகப்பக்கம் வாயிலாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

 

 


Pengarang :