ECONOMYMEDIA STATEMENT

வார இறுதியில் மேலும் 4 இடங்களில் கோவிட்-19 இலவச பரிசோதனை

ஷா ஆலம், மார்ச் 12- கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுக்கும் நோக்கிலான இலவச பரிசோதனை இயக்கம் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேலும் நான்கு இடங்களில் நடைபெறவுள்ளது.

பண்டார் புக்கிட் பூச்சோங், எம்.பி.எஸ்.ஜே. மண்டபம் மற்றும் சுபாங் ஜெயா, தாமான் பத்து தீகா  ஆகிய பகுதிகளில் நாளை சனிக்கிழமை இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை நடைபெறவுள்ளதாக கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.

வரும் ஞாயிற்றுக்கிழமையன்று ஷா ஆலம் செக்சன் 27, டேவான் செரோஜா எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்திலும் யுஎஸ்ஜே 7, எம்.பி.எஸ்.ஜே. மண்டபத்திலும் நடைபெறும் என்றார் அவர்.

இந்த நான்கு இலவச பரிசோதனை இயக்கங்களும் காலை மணி 9.00 முதல் மாலை மணி 4.00 வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

பண்டார் புக்கிட் பூச்சோங்கில் நடைபெறும் பரிசோதனை இயக்கத்தில் தாமான் முத்தியாரா இண்டா, தாமான் சவுஜானா பூச்சோங், பண்டார் புக்கிட் பூச்சோங் வட்டார மக்கள் கலந்து பயன் பெறலாம் என்று அவர் சொன்னார்.

தாமான் முத்தியாரா சுபாங், ஷா ஆலம்,செக்சன் 22 ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் தாமான் பத்து தீகாவில் நடத்தப்படும் சோதனையில் பங்கு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

சுபாங் பெர்டானா குட்இயர் கோர்ட் பகுதி மக்களை இலக்காக கொண்டு யுஎஸ்ஜே 7, எம்.பி.எஸ்.ஜே. மண்டபத்திலும் செக்சன் 27 வட்டார மக்களை இலக்காக கொண்டு டேவான் செரோஜா மண்டபத்திலும் இந்த பரிசோதனை இயக்கங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அவர்.

இவ்வாண்டு இறுதிக்குள் மாநிலம் முழுவதும் சுமார் 50,000 பேரை இலக்காக கொண்டு இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த இயக்கத்தை மேற்கொள்வதற்கு சிலாங்கூர் அரசு 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.


Pengarang :