I
ECONOMYSELANGOR

ரைட்” திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதில் மக்கள் பிரதிநிதிகளுடன்  எம்.எஸ்.என். ஒத்துழைப்பு


ஷா ஆலம், மார்ச் 16- "ரைட்" எனப்படும் ரோடா டாருள் ஏசான் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்ய  சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் மாநிலத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படும்.

இந்த ரைட் திட்டத்தின் கீழ் உண்மையில் பயன்பெறக் கூடியவர்களையும் பொருள் பட்டுவாடா துறையில் ஈடுபட ஆர்வம் கொண்டவர்களையும்  அடையாளம் காணும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக எம்.எஸ்.என். நிர்வாக இயக்குனர் முகமது நிசாம் மர்ஜுடி கூறினார்.

இத்திட்டத்திற்கு இலக்காக கொள்ளப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் மாநிலத்தில் உள்ள இளைஞர் அமைப்புகளின் உதவியும் நாடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாண்டின் முதல் இரண்டு மாதங்களில் 500 இளைஞர்கள் இந்த ரைட் திட்டத்தின் வழி பயனடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தில் பங்கேற்க 3,000 பேர் இலக்காக கொள்ளப்பட்டதாக கூறிய அவர், இந்த இலக்கை அடைய மேலும் அதிகமானோரின் பங்கேற்பை தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

இந்த ரைட் திட்டத்தின் கீழ் பி2 லைசன்ஸ் பெறுவதற்கு 350 வெள்ளி உதவித் தொகை, 150 வெள்ளி ரொக்கம் மற்றும் ஆண்டுக்கு 70 சொக்சோ சந்தா ஆகிய சலுகைகள் வழங்கப்படுகின்றன.

Pengarang :