MPK bersama polis menggempur sebuah premis hiburan apabila beroperasi tanpa lesen dalam operasi bersepadu pada 19 Jun 2020. Foto: Majlis Perbandaran Klang
ECONOMYSELANGOR

திரையரங்குகளுக்கு கேளிக்கை வரி விலக்கு- அரசாங்கம் விவாதிக்கத் தயார்

கோலாலம்பூர், மார்ச் 21- கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட திரையரங்க நடத்துநர்களுக்கு வரி விலக்களிப்பது தொடர்பான பரிந்துரையை அரசாங்கம் பரிசீலிக்க தயாராக உள்ளதாக தொடர்பு மற்றும்  பல்லூடக அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்டத் துறையினரிடமிருந்து புகார்களும் பரிந்துரைகளும் கிடைத்துள்ள போதிலும் அதிகாரப்பூர்வ மகஜர் எதுவும் அமைச்சுக்கு அனுப்பப்படவில்லை என்று அவர் சொன்னார்.

கேளிக்கை வரி வசூலிப்பு தொடர்பான விவகாரங்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள ஊராட்சி மன்றங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாக இருந்த போதிலும் இதன் தொடர்பில் விவாதிப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கேளிக்கை வரி தொடர்பில் எழும் புகார்கள் குறித்து நான் நீண்ட காலமாக அறிந்துள்ளேன். கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்குப் பிறகு  இவ்விவகாரத்திற்கு மேலும் அழுத்தம் கிடைத்துள்ளது. ஆயினும், தொடர்பில் எந்த அதிகாரப்பூர்வ மகஜரும் கிடைக்கவில்லை. இருந்தாலும் இது குறித்து நாங்கள் அறிந்துள்ளதோடு அதன் மீது கவனம் செலுத்தியும் வருகிறோம் என்றார் அவர்.

கேளிக்கை வரி  விலக்கு தொடர்பில் அதிகாரப்பூர்வ மகஜருக்காக காத்திருக்கிறேன். அதன் தொடர்பில் நாங்கள் பேசவும் தயாராக உள்ளோம். கோவிட்-19 பெருந்தொற்றினால் அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு உதவி முடிந்த அளவு உதவி வழங்க காத்திருக்கிறோம் என்றும் அவர் மேலும் சொன்னார்.

இங்குள்ள மிட்வேலி மெகா மால் பேரங்காடியில் உள்ள கோல்டன் ஸ்கீரின் சினிமாஸ் திரையரங்கில்


Pengarang :