ECONOMYSELANGORYB ACTIVITIES

கோவிட்-19 தடுப்பூசி விழிப்புணர்வு இயக்கத்தில் 288 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தீவிர பங்கேற்பு

சிகிஞ்சான், மார்ச் 25– கோவிட்-19 தடுப்பூசியின் அவசியத்தை பொதுமக்களிடையே உணர்த்தும் பணியில் மாநிலத்திலுள்ள 12 ஊராட்சி மன்றங்களைச் சேர்ந்த 288 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பாசார் பாகி மற்றும் பாலார் மாலாம் பகுதிகளுக்குச் சென்று தடுப்பூசியைப் பெறுவதற்கு பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களிடம் வலியுறுத்துவர் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தவிர்த்து கிராம சமூக நிர்வாக மன்ற உறுப்பினர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை ஊக்கமூட்டும் வகையிலான ஆதரவு இவர்களிடமிருந்து கிடைத்துள்ளது என்று அவர் சொன்னார்.

தடுப்பூசித் திட்டத்தில் பதிவு செய்யத் தெரியாதவர்களுக்கு குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் மைசெஜாத்ரா செயலி அல்லது அகப்பக்கம் அல்லது தொலைபேசி வாயிலாக இந்த பதிவு செய்வதற்கு இந்த ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உதவி புரிவர் என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற வட்டார குடியிருப்பாளர்களுக்கு நிலப்பட்டா வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு ஏதுவாக இந்த தடுப்பூசி இயக்கத்தில் பொதுமக்கள் பங்கு கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டா


Pengarang :