ECONOMYPBTSELANGOR

கம்போங் பாண்டானில்  வரும் ஞாயிறன்று இலவச கோவிட்-19 பரிசோதனை

ஷா ஆலம், மார்ச் 26- வரும் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கம்போங் பாண்டான், அம்பாங் வட்டாரத்தில் இலவச கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த பரிசோதனை இயக்கம் ஜாலான் எச், கம்போங் பாண்டான் எனும் முகவரியிலுள்ள அம்பாங் ஜெயா நகராண்மைக்கழக மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் என்று அவர் சொன்னார்.

பாண்டான் இண்டா, பாண்டான் மேவா, பண்டார் பாரு அம்பாங், கம்போங் பாண்டான், தாமான் கோசாஸ் மற்றும் சுற்றுவட்டார மக்கள் இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொண்டு பயன்பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக செலங்கா செயலி வாயிலாகவும் http://screening.selangkah.my எனும் அகப்பத்தின் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளும்படி பொது மக்களுக்கு அவர் ஆலோசனை கூறினார்.

இலவச கோவிட்-19 பரிசோதனை திட்டத்திற்காக சிலாங்கூர் மாநில அரசு 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. குறைந்த வருமானம் பெறுவோர் வசிக்கும் பகுதிகள் மற்றும் அதிக மக்கள் தொகையைக் கொண்டு இடங்களை மையமாக கொண்டு இந்த பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாண்டில் மாநிலம் முழுவதும் சுமார் ஐம்பதாயிரம் பேருக்கு இலவச கோவிட்-19 பரிசோதனைகளை  மேற்கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.


Pengarang :