ECONOMYPBTSELANGOR

அங்காடி வியாபாரிகளுக்கு புதிய வர்த்தக இடங்கள்- எம்.பி.எஸ்.ஏ. அடையாளம் கண்டது

ஷா ஆலம், ஏப் 1- தற்காலிக லைசென்ஸ் வழங்கப்பட்ட சிறு வியாபாரிகளுக்கான பொருத்தமான வர்த்தக இடங்களை ஷா ஆலம் மாநகர் மன்றம் அடையாளம் கண்டுள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்றின் தாக்கம் காரணமாக வருமான இழப்பை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு உதவும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவு பிரிவின் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

செக்சன் 7, ஜயண்ட் பேரங்காடி முன்புறம் உள்ள இடம், ஜாலான் நெலாயான் 19சி/ செக்சன் 19, ஜாலான் தீமோர் சி 24/சி செக்சன் 24 ஆகிய இடங்கள் சிறு வியாபாரிகளுக்கான வர்த்தக மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதோடு சுகாதாரத்தையும் பேணி வர வேண்டும் என வியாபாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

ஷா ஆலம் மாநகர் மன்றம் இதுவரை 658 தற்காலிக  வர்த்தக லைசென்ஸ்களை வியாபாரிகளுக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உதவும் வகையில் தற்காலிக லைசென்ஸ் விண்ணப்ப முறையை எளிதாக்கும்படி ஊராட்சி மன்றங்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியிருந்தார்.

சிறு வியாபாரிகள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக குறிப்பிட்ட இடங்களை ஊராட்சி மன்றங்கள் ஒதுக்கித் தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :