ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

2,635 பி.பி.ஆர். குடியிருப்பாளர்களுக்கு உணவுப் பொருளுக்கான பற்றுச் சீட்டு விநியோகம்

ஷா ஆலம், ஏப் 2- நான்கு மலிவு விலை அடுக்குமாடி வீடமைப்புப்பகுதிகளைச் (பி.பி.ஆர்.) சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு மாநில அரசு சார்பில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கான ஐம்பது வெள்ளி பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.

இந்த உணவு உதவித் திட்டம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டதாக வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதம் வரை கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட அத்திட்டத்தில் அந்த நான்கு குடியிருப்புகளில் வாடகைக்கு குடியிருக்கும் 2,635 பேருக்கு 50 வெள்ளிக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. அந்த பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்தி 99 ஸ்பீட்மார்ட் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவும் வகையில் கித்தா சிலாங்கூர் உதவித் திட்டத்தின் கீழ் இந்த பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஜூலை மாதம் வரை மேற்கொள்ளப்படவிருக்கும் அடுத்த கட்ட திட்டத்தில் பிபிஆர் ஐக்கோம், பிபிஆர் செரண்டா, பிபிஆர் கோத்தா டாமன்சாரா,  பிபிஆர் கவுன்சில் ஹோம் ஆகிய குடியிருப்புகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு இந்த உதவி வழங்கப்படும் என்றார் அவர்.

நோன்புப் பெருநாளுக்கு தயார் படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக வரும் மே மாத த்தில் இந்த உதவித் தொகை 100 வெள்ளியாக உயர்த்தப்படும். சம்பந்தப்பட்ட பி.பி.ஆர். குடியிருப்பாளர்களுக்கு உதவுவதற்காக 827,750 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :