ECONOMYNATIONALSELANGOR

இரண்டு கட்ட தடுப்பூசிகளையும் அதிகம் பெற்ற மாநிலம் சிலாங்கூர்

கோலாலம்பூர், ஏப்ரல் 2: தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியில் மொத்தம் 241,758 நபர்கள் தங்களது தடுப்பூசி ஊசி மருந்துகளின் இரண்டு டோஸ்களையும் நேற்று நிலவரப்படி பூர்த்தி செய்துள்ளனர்.

இதே காலகட்டத்தில் 498,468 நபர்கள் முதல் டோஸைப் பெற்றுள்ளதாகவும், நாட்டில் மொத்தம் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் கோவிட் -19 தடுப்பூசியை 740,226 ஆகக் கொண்டு வந்ததாகவும் சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார்.

இன்று தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு விளக்கப்படத்தில், டாக்டர் ஆதாம், தடுப்பூசியின் முதல் டோஸை 69,852 ஆகப் பெற்ற மிக உயர்ந்த மாநிலமாக சிலாங்கூர் திகழ்கிறது என்றும், அதைத் தொடர்ந்து பேராக் (49,996) மற்றும் சரவாக் (48,079) உள்ளனர் என்றும் கூறினார்.

சபா 46,023, கோலாலம்பூர் (44,702), ஜொகூர் (39,624), பஹாங் (33,693), பினாங்கு (33,045), கெடா (30,316), நெகிரி செம்பிலான் (24,690), திராங்கானு (24,516), கிளாந்தன் (22,596) , பெர்லிஸ் (9,846), புத்ராஜெயா (5,233), லாபுவன் (2,499).

இதற்கிடையில், கோவிட் -19 இரண்டாம் கட்ட தடுப்பூசி ஊசி பெற்ற தனிநபர்களின் எண்ணிக்கையில் சிலாங்கூர் அதாவது 28,616, சரவாக் (25,287) மற்றும் கோலாலம்பூர் (23,899) ஆகிய இரண்டு டோஸ்களை அதிகம் பெற்ற மாநிலங்களாக விளங்குகிறன.

அடுத்ததாக சபா (21,262), பேராக் (20,717), ஜொகூர் (18,696), பஹாங் (18,507), கிளாந்தன் (15,618), கெடா (15,300), திராங்கானு (13,237), பினாங்கு (11,563), நெகிரி செம்பிலன் (10,620) 6,857), பெர்லிஸ் (5,610), புத்ராஜெயா (3,682), லாபுவன் (2,287).

இதற்கிடையில், தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்திற்கான பதிவுகளின் எண்ணிக்கை 7,625,478 அல்லது 31.4 சதவீதமாக இருந்தது, சிலாங்கூர் அதிகபட்சமாக 2,085,983 பதிவுகளை செய்துள்ளது.

நோய்த்தடுப்பு திட்டத்தின் படி, பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை முதல் கட்ட தடுப்பூசியை செயல்படுத்தும் காலம் சுகாதார ஊழியர்கள் உட்பட 500,000 முன்னணி பணியாளர்களை உள்ளடக்கும்.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை எதிர்பார்க்கப்படும் இரண்டாம் கட்டமாக இந்த திட்டம் தொடரும், இதில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 9.4 மில்லியன் மூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு கூடுதலாக நோயுற்ற பிரச்சினைகள் உள்ள பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் உள்ளனர்.

2022ஆம் ஆண்டு மே முதல் பிப்ரவரி வரை திட்டமிடப்பட்ட மூன்றாம் கட்டம் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சுமார் 14 மில்லியன் மக்களை இலக்காகக் கொண்டது என்றார் அவர்..


Pengarang :