ECONOMYPBT

போன்ஸ் வழங்குவதில் சமநிலையான விகிதாசார முறை கடைபிடிக்கப்படும்- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், ஏப் 8- கோவிட்-19 நோய்த் தாக்கம் காரணமாக முதன்மை அடைவு நிலைக் குறியீட்டின் (கே.பி.ஐ.) அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் நடைமுறையை சிலாங்கூர் அரசு ஒத்தி வைத்துள்ளது.

மாநிலத்தின் நிதி நிலையை சமபடுத்தும் விதமாகவும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும் போனஸ் வழங்குவதில் சமநிலையான விகிதாசார முறை கடைபிடிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கே.பி.ஐ. முறையை மீண்டும் பயன்படுத்துவதற்கு பொருத்தமான சூழல் வரும் வரை சமநிலையான விகிதாசார அடிப்படையில் போன்ஸ் வழங்கும் நடைமுறை தொடரும் என அவர் சொன்னார்.

அதிகமான போனஸ் தொகையைப் பெற வேண்டும் என்ற வேட்கையில் அரசு ஊழியர்கள் கடுமையாக உழைப்பதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த கே.பி.ஐ. முறை அமல்படுத்தப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற 126 சிறந்த அரசு ஊழியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

அரசு ஊழியர்களுக்கு கே.பி.ஐ. முறையில் போனஸ் வழங்கப்படும் என்று மந்திரி புசார் கடந்த 2018ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். குறிப்பட்ட நிர்ணய அளவை எட்டும் ஊழியர்களுக்கு இரண்டு மாதத்திற்கும் கூடுதலான போனஸ் தொகை வழங்கப்படும் எனறும் அவர் கூறினார்.


Pengarang :