Juwairiya Zulkifli meninjau
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

தென்னமரம் தோட்டம் அருகில் நிலம் குத்தகைக்கு விடப்பட்ட விவகாரம்- மாநில அரசு விசாரணை நடத்தும்

ஷா ஆலம், ஏப் 9– பெஸ்தாரி ஜெயாவிலுள்ள தென்னமரம் தோட்ட குடியிருப்பு பகுதிக்கு அருகில் நிலம் குத்தகைக்கு விடப்பட்ட விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் மாநில நில மற்றும் கனிமவளத்துறை விரிவான அளவில் விசாரணை மற்றும் ஆய்வினை மேற்கொள்ளும்.

அரசு நிர்வாகத்தின் அனைத்து நிலைகளிலும் ஊழலும் அதிகாரத் துஷ்பிரயோகமும் நிகழ்வதை மாநில அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்று மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் ஜூவாய்ரிய ஜூல்கிப்ளி கூறினார்.

ரிபோர்மாசி இயக்கத்தின் உயரிய கோட்பாடுகளுக்கேற்ப குற்றம் புரிந்தவர்களுக்கு மாநில அரசு ஒரு போதும் அடைக்கலம் தராது என்பதோடு கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தயங்காது என்று அவர் சொன்னார்.

இவ்விவகாரத்தில் அமலாக்கத் தரப்பினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க மாநில அரசு தயாராக உள்ளதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

தென்னமரத் தோட்டத்தில்  பணிகளை மேற்கொள்ள இரு நிறுவனங்களுக்கு குத்தகை வழங்கப்பட்டதை எதிர்த்து அத்தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 100 பேர் கடந்த புதன் கிழமையன்று மறியல் நடத்தினர்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வரும் தங்களிடம் கலந்தாலோசிக்காமல்  மாநில அரசு அந்த 800 ஹெக்டர் தோட்டத்தை குத்தகைக்கு விட்டுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்


Pengarang :