ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பணக்கார நாடுகள் பதுக்கி வைப்பதால் ஏழை நாடுகளுக்கு எட்டாக் கனியாகும் தடுப்பூசி

பெட்டாலிங் ஜெயா, ஏப் 14- மலேசியாவில் கோவிட்-19 தடுப்பூசியின் விநியோகம் குறைவாக இருப்பதற்கு அந்த தடுப்பூசியை பதுக்கி வைக்கும் பணக்கார நாடுகளின் போக்கே காரணமாக  விளங்குவதாக  கோவிட்-19 தேசிய தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர்  கைரி ஜமாலுடின் கூறினார்.

கோவிட்-19 தடுப்பூசி சந்தையை பணக்கார நாடுகள் ஆக்கிரமித்துக் கொண்டதால் மலேசியா போன்ற நடுத்தர வருமான கொண்ட நாடுகளுக்கு குறைவான அளவில் தடுப்பூசி கிடைக்கிறது என்று அவர் சொன்னார்.

சில பணக்கார நாடுகள் தங்கள் பிரஜைகளின் தேவைக்களுக்கு மேல்  மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகமாக தடுப்பூசிகளை வாங்கிக் குவித்துள்ளன என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

பல மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பணக்கார நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் மலேசியா போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் தடுப்பூசியைப் பெறுவதற்கு இதர வழிகளை நாட வேண்டியுள்ளது என்றார் அவர்.

இதன் காரணமாகவே  அஸ்ட்ராஸேனேகோ மற்றும் சீனாவின் சினேவேக் தடுப்புசிகளைக் கொண்டு நாட்டின்  தடுப்பூசித் தேவையை ஈடு செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் தடுப்பூசி இயக்கம் வரும் ஜூன் மாதம் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும் போது நாடு போதுமான அளவு தடுப்பூசியை சீராக பெற ஆரம்பிக்கும் என்றும் அவர் சொன்னார்.

.


Pengarang :