ECONOMYMEDIA STATEMENT

மருத்துவத் துறையில் திறன் பெற்ற பணியாளர்களை உருவாக்க செல்கேட்- ஐ.எம்.யு. ஒப்பந்தம்

ஷா ஆலம், ஏப் 14- சுகாதாரத் துறையில் அதிகமான திறன் பெற்ற  பணியாளர்களை உருவாக்கும் நோக்கில்  செலேட் ஹெல்த்கேர் சென். பெர்ஹாட் நிறுவனமும் அனைத்துலக மருத்துவ பல்கலைக்கழகமும் (ஐ.எம்.யு.) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

அரசாங்க  மற்றும் தனியார் உயர்கல்விக் கூடங்களில் படிப்பை முடித்து இன்னும் பயிற்சியில் ஈடுபடாத பட்டதாரிகள் மருத்துவ உதவியாளர்கள், தாதியர் மற்றும் மூத்த குடிமக்களை பராமரிப்பாளர் பயிற்சியை பெறுவதற்கு இந்த புரிந்துணர்வு  ஒப்பந்தம் வகை செய்யும் என்று செல்கேட் ஹெல்த்கேர் நிறுவனத்தின்  நிர்வாக இயக்குநர் நோர் ஹிஷாம் முகமது கவுத் அறிக்கை ஒன்றில் கூறினார்.

மனித மூலதன மேம்பாடு , தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் சமூக ஈடுபாடு ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படும் இந்த  ஒத்துழைப்பின் வாயிலாக  ஆள்பலத் துறையில் குறிப்பாக,  சுகாதாரத் துறையில் நிலவும் வேலையில்லாப் பிரச்னைகளை  களைய முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக எதிர் காலத்தில் சுகாதார துறைக்கு தேவையான தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளை செல்கேர் நிறுவனம் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதாரத் துறை அபரிமித தொழில்நட்ப வளர்ச்சியைக் கண்டு வரும் வேளையில்  இந்த ஒப்பந்தம் செய்யப்படுவது  காலத்திற்கு ஏற்றதாக  அமைந்துள்ளது என்று ஐ.எம்.யு. பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பாபா கூறினார்.

 


Pengarang :