MEDIA STATEMENTSELANGOR

கட்சி அனுமதித்தால் கோம்பாக் தொகுதியில் போட்டியிடத் தயார்- அமிருடின் ஷாரி கூறுகிறார்

ஷா ஆலம், ஏப் 16- வரும் 15வது பொதுத் தேர்தலில் தாம் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதை கெஅடிலான் கட்சித் தலைமைத்துவத்தின் முடிவுக்கே விட்டு விடுவதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதிக்கு தமது பெயர் முன்மொழியப்பட்டால் அங்கு களம் காண தாம் தயாராக உள்ளதாக சிலாங்கூர் மாநில கெஅடிலான் தலைமைத்துவ மன்றத்தின் தவைருமான அவர் குறிப்பிட்டார்.

வரும் பொதுத் தேர்தலில் கோம்பாக் நாடாளுன்றத் தொகுதியில் போட்டியிடும் சாத்தியம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

சாத்தியங்கள் பல வகையில் உள்ளன. ஒரு வேளை நான் போட்டியிடலாம். போட்டியிடாமலும் போகலாம். ஆனால் நிச்சயமாக கட்சித் தாவ மாட்டேன் என்று சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

இங்குள்ள விஸ்மா எசானில் நடைபெற்ற ஸ்மார்ட் சிலாங்கூர் இலக்கவியல் வியூக திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

விசுவாசமான கட்சி உறுப்பினர் என்ற முறையில் கட்சித் தலைமைத்துவம் எடுக்கும் முடிவுகளுக்கு தாம் எப்போதும் கட்டுபட்டு நடந்து வருவதாக அவர் கூறினார்.

 

 


Pengarang :