MEDIA STATEMENTNATIONAL

451,237 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், ஏப் 20- இம்மாதம் 19ஆம் தேதி வரை நாடு முழுவதும் 451,237 பேர் தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

இக்காலக்கட்டத்தில் 726,411 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுளளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.

இந்த எண்ணிக்கையைச் சேர்த்து நாட்டில் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை  11 லட்சத்து 77 ஆயிரத்து 648 ஆக உயர்ந்துள்ளதாக அவர் சொன்னார்.

சிலாங்கூரில் ஆகக் கூடுதலாக அதாவது  101,208 பேர் தடுப்பூசியைப் பெற்றுள்ள நிலையில்  அதற்கு அடுத்த நிலையில் கோலாலம்பூர் (80,978), ஜொகூர் (70,999), சரவா (70,592) மற்றும் பேராக் (60,384) ஆகிய மாநிலங்கள் உள்ளதாக அவர் கூறினார்.

இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாக பெற்ற மாநிலங்கள் பட்டியலில்  64,306 பேருடன் சிலாங்கூரே முன்னிலை  வகிக்கிறது. அதனைத் தொடர்ந்து பேராக் (48,926), சபா (43,452), கோலாலம்பூர் (40,681) சரவா (35,653) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதனிடையே, தடுப்பூசித் திட்டத்திற்கு இலக்காக கொள்ளப்பட்டவர்களில் 37.30 விழுக்காட்டினர் அதாவது 90 லட்சத்து 48 ஆயிரத்து 237 பேர் தடுப்பூசித் திட்டத்திற்கு தங்களைப் பதிந்து கொண்டுள்ளனர். இவர்களில் 23 லட்சத்து 75ஆயிரத்து 926 பேர் சிலாங்கூரை சேர்ந்தவர்கள் என்று அடாம் பாபா சொன்னார்.

 

 


Pengarang :