ANTARABANGSAMEDIA STATEMENT

மெக்சிகோ, போலந்தில் போலி கோவிட்-19 தடுப்பூசிகள் கண்டு பிடிப்பு

மாஸ்கோ, ஏப் 22- மெக்சிகோ மற்றும் போலந்தில் போலி கோவிட்-19 தடுப்பூசிகளை அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான பைசர் கண்டு பிடித்துள்ளது.

மெக்சிகோவில் 80 பேர் அந்த போலி கோவிட்-19 தடுப்பூசியை டோஸ் ஒன்று ஆயிரம் அமெரிக்க டாலர் (4,109 மலேசிய ரிங்கிட்) கட்டணத்தில் கிளினிக் ஒன்றில் செலுத்திக் கொண்டதாக வால்ஸ் ஸ்ட்ரீட் ஜர்னல் சஞ்சிகை கூறியது.

அந்த தடுப்பூசி புட்டியின் மீது ஒட்டப்பட்டிருந்த லேபிளும் போலியானது என்றும் அது தெரிவித்தது.

போலந்தில் கண்டு பிடிக்கப்பட்ட போலி கோவிட்-19 தடுப்பூசி சரும சுருக்கத்தை போக்கும் மருந்தாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் இந்த தடுப்பூசியை இதுவரை யாரும் பெறவில்லை என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் கூறினர்.

கோவிட்-19 நோயை பெருந்தொற்று என உலக சுகாதார நிறுவனம் கடந்த 2020 மார்ச் 11ஆம் தேதி அறிவித்தது. இன்று வரை உலகம் முழுவதும் 14 கோடியே 34 லட்சத்து 80 ஆயிரம் பேர் இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ள வேளையில் 30 லட்சத்து 50 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறியது.

.


Pengarang :