ECONOMYPENDIDIKANSELANGOR

நான்கு  மாவட்டங்களை இலக்காகக் கொண்டு  பள்ளி  வளாகங்களில் இலவச கோவிட்-19 பரிசோதனை

ஷா ஆலம், ஏப் 24- பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் நான்கு மாவட்டங்கள் இலக்காக கொள்ளப்படும்.

நோய்த் தொற்று பரவல் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்ட பெட்டாலிங், கிள்ளான், உலு லங்காட் மற்றும் கோம்பாக் ஆகியவையே அந்த நான்கு மாவட்டங்களாகும் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

இந்நோக்கத்திற்காக பள்ளிகளை அடையாளம் காணும் பணியை மாநில சுகாதாரத் துறை மற்றும் மாநில கல்வித் துறையை உட்படுத்திய சிறப்பு பணிக்குழு  மேற்கொள்ளும் என்று அவர் சொன்னார்.

அந்த பணிக்குழு சில தினங்களுக்கு முன்னர்தான் கூட்டத்தை நடத்தியது. இலவச  பரிசோதனை நடத்த வேண்டிய இடங்களை அந்த குழுதான் முடிவு செய்யும். எங்களிடம் அதன் தொடர்பான முழுமையான தகவல்கள்    இல்லை என்றார் அவர்.

இங்குள்ள மாநில அரசாங்க தலைமைச் செயலகத்தின் கீழ்த்தளத்தில் நடைபெறும் இல்லத்தரசிகளின் கைவினைப் பொருள் கண்காட்சியை திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநிலத்திலுள்ள 19 பள்ளிகள் கடந்த திங்கள்கிழமை தொடங்கி எழு நாட்களுக்கு மூடப்பட்டன


Pengarang :