ECONOMYSELANGORSUKANKINI

தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய .மின்- விளையாட்டு மேம்பாட்டு மையம்- சிலாங்கூர் உருவாக்கும்

ஷா ஆலம், மே 1– தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய மின்னியல் விளையாட்டு மேம்பாட்டு மையத்தை சிலாங்கூர் மாநில அரசு  ஒரு கோடி வெள்ளி செலவில் உருவாக்கவுள்ளது.

பயிற்சி மையம், தங்குமிடம், ஒளிப்பதிவு கூடம் மற்றும் திறன்மிக்க பயிற்றுநர்களை உள்ளடக்கிய அந்த மையத்தை அடுத்தாண்டு முதல் பயன்படுத்த முடியும் என்று விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார்.

மின்னியல் விளையாட்டு மேம்பாட்டு மையத்தை அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. இது சிலாங்கூர் மாநில அரசாங்க வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக விளங்குகிறது என்று அவர் சொன்னார்.

மாநில அரசு மற்றும் தனியார் துறையின் நிதி பங்களிப்பின் வழி மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்கு ஒரு கோடி வெள்ளி செலவு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த மின்னியல் விளையாட்டு மேம்பாட்டுத் திட்ட அமலாக்கம் தொடர்பில் செர்பா டைனமிக் குழுமத்திற்கும் மின்னியல் விளையாட்டு சங்கத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இங்குள்ள செக்சன் 13இல் உள்ள  கார்ல்டன் ஹோட்டல் மறுசீரமைப்பு செய்யப்பட்டு மின்னியல் விளையாட்டு மேம்பாட்டு மையமாக பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :