MEDIA STATEMENTNATIONAL

பத்திரிகை சுதந்திரம் தொடர்பில் அமைச்சுக்கு மகஜர்- ஊடக அமைப்புகள் வழங்கின

புத்ராஜெயா, மே 3– பத்திரிகை சுதந்திரம் தொடர்ந்து  நிலைநாட்டப்படுவதை உறுதி செய்யக் கோரி ஊடகத் துறை சார்ந்த மூன்று அரசு சாரா அமைப்புகள் தொடர்பு மற்றும் பல்லுடக அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லாவிடம் மகஜர்  சமர்ப்பித்தன.

சி.ஐ.ஜே. எனப்படும்  சுதந்திர பத்திரிகை துறைக்கான மையம், என்.யு.ஜே. எனப்படும் தேசிய பத்திரிகையாளர் சங்கம்,  கெராக்கான் மீடியா மெர்டேக்கா ஆகிய அந்த மூன்று அமைப்புகளும் அந்த மகஜரை அமைச்சிடம் ஒப்படைத்தன.

மே 3ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக பத்திரிகைச் சுந்திர தினத்தை முன்னிட்டு இந்த மகஜர் வழங்கப்பட்டதாக என்.யு.ஜே. தலைவர் ஃபாரா மர்சித்தா அப்துல் ஃபாத்தா கூறினார்.

அரசாங்கம் பத்திரிகை சுதந்திரத்தை ஊக்குவிக்கும் என்பதோடு ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்குரிய சூழலையும் உருவாக்கித் தரும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

ஊடக எதிர்திறன் நிதி மற்றும் மலேசிய ஊடக மன்ற உருவாக்கம், கோவிட்-19 தடுப்பூசியை ஊடகவியலாளர்கள் விரைந்து பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட கோரிகைகளை அந்த மகஜர் உள்ளடக்கியுள்ளதாக அவர்  சொன்னார்.

இதனிடையே, அரசாங்க கொள்கைகள் தொடர்பில் சரியான தகவல்களை வெளியிடுவதில் ஊடகவியலாளர்கள் கடும் சவாலை எதிர்நோக்குவதாக சி.ஐ.ஜே.  நிர்வாக இயக்குநர் வத்சலா ஜி. நாயுடு கூறினார்.

விமர்சன  ரீதியான செய்திகளையும் வெளியிடுவதற்கு ஊடகங்களுக்கு அனுமதி தரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 


Pengarang :