ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

2021ஆம் ஆண்டிற்கான  ‘தோக்கோ இபு பெகாவானிஸ்‘  விருதை  திருமதி கலைவாணி பெற்றார்

ஷா ஆலம் மே 7- இவ்வாண்டுகான தோக்கோ இபு பெகாவானிஸ்  விருதை தாமான் ஸ்ரீ மூடாவை சேர்ந்த  திருமதி கலைவாணி பெற்றுக்கொண்டார்.

சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரியின் துணைவியார் டத்தின் ஸ்ரீ மஸ்டினா முகமட் கீழ் செயல்ப்படும் பெண்களுகான சிறப்பு அமைப்பான பெகாவானிஸ் மூலமாக அன்னையர் தினத்தை முன்னிட்டு சிறந்த தாய் என்னும் தொக்கோ இபு பெகாவானிஸ் 2021 விருதினை பெற்றுக்கொண்டார்.

நான்கு பிள்ளைகளுக்கு தாயான திருமதி கலைவாணி பல இன்னல்களுக்கு மத்தியில் பிள்ளைகளை சமுகத்திலும் நாட்டினிலும் சிறந்த நிலையில் வளர்த்து பேரப்பிள்ளைகளையும் பெற்று கூட்டுக்குடும்பமாகவும் வாழ்ந்து வருகின்றார். சாதாரண குடும்பத்தில் பிறந்த இவருக்கு இளம் வயதினிலேயே பெற்றோரையும் இழந்ததால்,கல்வியையும் முழுமையாக முடிக்க முடியாத நிலையில் தன் குடும்பத்திற்காக கடும் உழைப்பால் உயர்ந்தும் உள்ளார்.

பி.சாமிநாதனை திருமணம் செய்த பிறகு கணவருக்காகவும் பிள்ளைகளுகாகவும் தன் வாழ் நாளை அர்ப்பணித்தும் வந்துள்ளார்.இவரின் தியாகத்தை பாராட்டும் வகையில் சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் வீ.கணபதி ராவின் துணைவியார் திருமதி புவனேஸ்வரி தன் கரங்களால் அவருக்கு இச்விருந்தினை எடுத்து வழங்கினார்.

 


Pengarang :