ECONOMYHEALTHPBTSELANGOR

இலவச கோவிட்-19 பரிசோதனை மே 18ஆம் தேதி மீண்டும் தொடங்கும்

ஷா ஆலம், மே 15– நோன்புப் பெருநாளையெட்டி சிறிது நாட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் வரும் செவ்வாய்க்கிழமை மறுபடியும் தொடங்கும்.

அவ்வியக்கம் எம்.பி.ஏ.ஜே. சமூக மண்டபத்திலும்  எம்.பி.ஏ.ஜே. ஏயு2 மண்டபத்திலும் காலை மணி 9.00 முதல் மாலை மணி 4.00 வரை நடைபெறும் என்று கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து 19ஆம் தேதி சுங்கை துவா ஸ்ரீ சியாந்தான் மண்டபத்திலும் கோம்பாக் செத்தியா பெரிங்கின் மண்டபத்திலும்  20ஆம் தேதி ரவாங் 17 மைலிலும் தாமான் டெம்ப்ளர், கம்போங் பெண்டஹாரா டேவான் செரோஜாவிலும் இவ்வியக்கம் நடத்தப்படும் என்றார் அவர்.

வரும் 21ஆம்  தேதி குவாங் டேவான் செர்பகுணா மற்றும் ஸ்ரீ கெம்பாங்கான் ஸ்ரீ கெம்பாங்கான் டேவான் செர்பகுணா ஆகிய இடங்களில் இந்த இயக்கம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்ட பலருக்கு அந்நோய்க்கான அறிகுறி அறவே தென்படாத காரணத்தால் இத்தகைய சோதனைகளில் பங்கேற்று அந்நோயின் தாக்கத்திலிருந்து விடுபடுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் மாநில அரசு இம்மாதம் 8ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை தினசரி 2 தொகுதிகள் வீதம் மாநிலத்திலுள்ள அனைத்து  தொகுதிகளிலும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது.

காஜா, செமினி, டுசுன் துவா, பலாக்கோங், லெம்பா ஜெயா, பண்டான் இண்டா, சுங்கை ராமால், தெராத்தாய் ஆகிய தொகுதிகளில்  இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 8,585 பேர் பங்கு கொண்டு பயனடைந்துள்ளனர்.


Pengarang :