ECONOMYNATIONAL

பேரங்காடிகளில் இரண்டு மணி நேரத்திற்கு கூடுதலாக இருந்தால் அபராதம்- அமைச்சர் எச்சரிக்கை

ஷா ஆலம், மே 28- வாடிக்கையாளர்கள் வர்த்தக மையங்களில் இரண்டு மணி நேரத்திற்கும் கூடுதலாக இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவாகரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் ந ந்தா லிங்கி எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துறை அமைச்சின் அமலாக்க அதிகாரிகள், போலீசார் மற்றும் சுகாதார அதிகாரிகள் மேற்கொள்ளும் சோதனைகளின் போது இத்தகையோருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

கடந்த புதன் கிழமை ஆரம்பிக்கப்பட்ட இரண்டு மணி நேர வரம்பு சோதனை நடவடிக்கையின் கீழ் நாடு முழுவதும் உள்ள வர்த்தக மையங்களில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

வாடிக்கையாளர்களின் மைசெஜாத்ரா செயலியை நாங்கள் பரிசோதனை செய்வோம். அமலாக்க அதிகாரிகள் பேரங்காடிகளில் சோதனை மேற்கொள்வதன் மூலம் எஸ்.ஒ.பி. விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் நேரத்திற்கு பேராங்காடிகளில் இருந்த குற்றத்திற்காக இதுவரை யாருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக எஸ்.ஒ.பி. விதிமுறைகள் எப்போதும் கடைபிடிப்பதை உறுதி செய்யும்படி வாடிக்கையாளர்கள் மற்றும் பேரங்காடி நிர்வாகத்தினரை  அமைச்சர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :