HEALTHPBTSELANGOR

பி.கே.பி.டி அமல் செய்யப்பட்ட சபாக் பெர்ணம் வட்டார மக்களுக்கு .87,000 வெள்ளி செலவில் உதவித் திட்டம்

சபாக் பெர்ணம், மே 30– கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட சபாக் பெர்ணம் மாவட்டத்தின் மூன்று குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக மந்திரி புசார் கழகத்தின் சார்பில் 87,000 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரிசி, மாவு, சார்டின், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய 376 பொட்டலங்களை தாங்கள் வழங்கும் வேளையில் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் சார்பாக மேலும் 500 பொட்டலங்கள் வழங்கப்படும் என்று மந்திரி புசார் கழகத்தின் சமூக கடப்பாட்டு பிரிவின் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

அங்கு வசிக்கும் 876 குடும்பங்களை சேர்ந்த 3,900 பேர் இதன் மூலம் பயன் பெறுவர். கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார சுமைகளை ஓரளவு குறைப்பதில் இந்த உதவி துணை புரியும் என தாங்கள் நம்புவதாக அவர் சொன்னாபர்.

சபாக் பெர்ணம் மாவட்டத்தில் உள்ள தாமான் பெர்த்தாமா, தாமான் செரெண்டா, தாமான் பிரிமா ஆகிய குடியிருப்பு பகுதிகளில் இன்று தொடங்கி இரு வாரங்களுக்கு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படுகிறது.

 


Pengarang :