ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பொது முடக்க காலத்தில் ஏற்றுமதி, இறக்குமதிக்கு அனுமதி அளிப்பீர்- தொழிற்சாலை உரிமையாளர் சங்கம் கோரிக்கை

கோலாலம்பூர், மே 30- முழுமையான பொது முடக்க அமலாக்க காலத்தில் நாட்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று மலேசிய தொழிற்சாலை உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இக்காலக்கட்டத்தில் துறைமுகங்கள், கிடங்கு சேவை, பொருள் விநியோக நடவடிக்கைகள் முழு அளவில் செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியது.

tவெளிநாடுகளுடன் விநியோக ஒப்பந்தம் செய்துள்ள தயாரிப்புத் துறைகள் 50 விழுக்காட்டு ஆள்பலத்துடன் தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதிக்க  வேண்டும் என்று அந்த சம்மேளனம் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டது.

வாரம் ஏழு நாட்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயலபட வேண்டிய கட்டாயத்தில் உள்ள பாய்லர் உள்ளிட்ட சாதனங்களை கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் 20 விழுக்காட்டு தொழிலாளர்களுடன் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு வழங்கப்படுவது அவசியம் என்றும் அது தெரிவித்தது.

உயிர்களைக் காப்பாற்றுவற்கும் வருமானத்தை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் இதுநாள் வரை சமஅளவிலான முக்கியத்துவத்தை அளித்து வருவதை நாங்கள் உணர்ந்துள்ளோம். எனினும், கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை  அபரிமிதமாக அதிகரித்த காரணத்தால் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பொது முடக்கம் காரணமாக பாதிக்கப்படும் மக்களுக்கும் பொருளாதார துறைக்கும் உதவக்கூடிய திட்டங்கள் குறித்து நிதியமைச்சு ஆய்வு மேற்கொண்டு வருவதாக வெளிவந்த தகவல்  தங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக அது மேலும் தெரிவித்தது.


Pengarang :