ECONOMYMEDIA STATEMENTNATIONAL

முழு பொது முடக்க காலத்தில் 17 துறைகள் மட்டுமே செயல்பட அனுமதி

ஷா  ஆலம், மே 30- ஜூன் மாதம் முதல் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தின் போது 17 துறைகள் மட்டுமே செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுவதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி  யாக்கோப் கூறினார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அந்த 17 துறைகளை அமைச்சர் பட்டியலிட்டார்.

  1. கால்நடைகள் உள்ளிட்ட அனைத்து தேவைக்குமான உணவு மற்றும் பானங்கள் விநியோகம்
  2. அனைத்து விதமான மருத்துவ மற்றும் சுகாதாரத் துறைகள்
  3. நீர்
  4. மின்சாரம்
  5. பாதுகாப்பு, தற்காப்பு, அவசர நிலை, சமூகநலன், மனிதாபிமான உதவி
  6. திடக்கழிவு, பொது து ய்மை, கழிவு நீர் அகற்றும் சேவை
  7. தரை, ஆகாய, நீர் வழிச் சேவை
  8. துறைமுகம், விமான நிலைய சேவை
  9. ஊடகம், தொலைத் தொடர்பு, இணையம், தபால், துரித பட்டுவாடா சேவை, ஒளிபரப்பு உள்ளிட்ட தகவல் சேவைகள்
  10. வங்கிகள், காப்புறுதி மூலதனச் சந்தை
  11. அடகுக்கடை
  12. மின் வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
  13. எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய் விநியோகம், விற்பனை
  14. ஹோட்டல் மற்றும் தங்குமிட வசதி ( சுற்றுலா தவிர்த்து தொழிலாளர்களை தனிமைப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டும் அனுமதி
  15. அவசர நோக்கத்திற்காக பழுதுபார்ப்பு, பராமரிப்பு மற்றும் கட்டுமானம்
  16. காட்டு வளச் சேவை
  17. அத்தியாவசிய பொருள் விநியோக சேவை. 

Pengarang :