HEALTHNATIONALSELANGOR

தடுப்பூசிக்கான செலங்கா செயலி பதிவில் முறைகேடு நிகழவில்லை- மந்திரி புசார்-  அமைச்சர் கைரி உறுதிப்படுத்தினர்

ஷா ஆலம், மே 31– சில தரப்பினர் குற்றஞ்சாட்டுவது போல் அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிக்கான பதிவில் செலங்கா நிர்வாகத் தரப்பில் எந்த முறைகேடும் நிகழவில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மக்கள் உள்பட அனைத்து மலேசியர்களுக்கும் தடுப்பூசி செலுத்துப்படுவதை உறுதி செய்யும் கடப்பாட்டை தாங்கள் கொண்டுள்ளதை  எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கதுறை அமைச்சும் சிலாங்கூர் மாநில அரசும் உறுதிப்படுத்தின.

சில தரப்பினர் குற்றஞ்சாட்டுவது போல் தடுப்பூசிக்கான பதிவு முறையில் செலங்கா தரப்பில் எந்த முறைகேடும் நிகழவில்லை என அமைச்சர் கைரி ஜமாலுடின் மற்றும் மந்திரி புசார் அமிருடின் ஷாரி கையெழுத்திட்ட அந்த அறிக்கை கூறியது.

தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சராக கைரி பொறுப்பேற்றுள்ள வேளையில் சி.ஐ.டி.எஃப். எனப்படும்  சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை மன்றத்தின் தலைவராக அமிருடின் உள்ளார்.

இணைய வசதி இல்லாதவர்களை தடுப்பூசி திட்டத்தில் பதிவதற்காக உருவாக்கப்பட்ட இ-முனிசெல்  திட்ட்டத்தின் கீழ தனிநபர்களை மாநில அரசு பதிவு செய்திருந்ததாக அந்த அறிக்கை கூறியது.

இ-முனிசெல் திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்கள்  தடுப்பூசித் திட்டத்திற்கு பதிந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

சிலாங்கூர்வாசிகள் உள்பட நாட்டு மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதில் சிலாங்கூர் மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை சி.ஐ.டி.எஃப். வரவேற்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :