ECONOMYHEALTHNATIONALPBT

கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் திட்டம்- 50 லட்சம் பேர் பயன்

கோலாலம்பூர், ஜூன் 1– சுமார் 3,000 கோடி வெள்ளி மதிப்பிலான கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் திட்டம் (மோரட்டோரியம்) மற்றும் கடனைத் திரும்பச் செலுத்துவதில் உதவும் திட்டம்  இவ்வாண்டு ஜூன் மாதம் அமலுக்கு வருகிறது.

இவ்விரு திட்டங்கள் வாயிலாக சுமார் 50 லட்சம் கடனாளிகள் பயகடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் திட்டம்- 50 லட்சம் பேர் பயன் பெறுவர்கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் திட்டம்- 50 லட்சம் பேர் பயன் பெறுவர்பெறுவர் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.

பேங்க் நெகாரா மலேசியா மற்றும் வங்கித் துறையினருடன் தாங்கள் நடத்திய சந்திப்பின் போது கடனைத் திரும்பச் செலுத்துவதில் உதவும் திட்டம் மற்றும் கடனை திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் ஆகியவற்றை அமல்படுத்துவதில் தங்களுக்கு உள்ள கடப்பாட்டை அவை வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் வழி, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கம் காரணமாக வேலை இழந்தவர்கள் மற்றும் வருமான பாதிப்பை எதிர்நோக்கும் சிறிய வியாபாரிகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் ஆகியோருக்கு மூன்று மாதங்களுக்கு கடனைத் திரும்பச் செலுத்துவதை இயல்பாக ஒத்தி  வைக்கும் மோரட்டோரியத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படும் என அவர் சொன்னார்.

நேற்றிரவு 4,000 கோடி வெள்ளி மத்திப்பிலான பெமெர்க்காசா பிளஸ் உதவித் திட்டத் தொகுப்பை அறிவித்த போது இவ்விபரங்களை பிரதமர் வெளியிட்டார்.

இது தவிர, 100 கோடி வெள்ளி மதிப்பிலான பஸ் மற்றும் டாக்சிக்கான வாடகை கொள்முதல் புனரமைப்புத் திட்டம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

இந்த புனரமைப்புத் திட்டத்தின் வழி பஸ் மற்றும் டாக்சி நடத்துநர்கள் மாதாந்திர தவணைப் பணத்தை செலுத்துவதை 12 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை ஒத்தி வைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடன் மற்றும் வர்த்தக மையங்களுக்கான வாடகை ஆகியவற்றை வசூலிப்பதை ஒத்தி வைக்கும்படி அரசு ஏஜென்சிகள் மற்றும் நிறுவனங்களை தாம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Pengarang :