ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19  நோய்த் தொற்றைத் தணிப்பதில் அடுத்த இரு வாரங்கள் மிக அத்தியாவசியமானவை- நோர் ஹிஷாம் கூறுகிறார்

ஷா ஆலம், ஜூன் 13- நாட்டில் கோவிட்-19 நோய்த தொற்று எண்ணிக்கையை 4,000க்கும் கீழ் குறைப்பதில்  முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்யப்பட்டுள்ள அடுத்த இருவாரங்கள் மிகவும் முக்கியமானவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

தற்போது அதிகப்பட்ச நிலையில் இருக்கும் கோவிட்-19 நோய்த் தொற்றை தணிப்பதில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் இந்த இரு வார காலத்தில் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.

எனினும், பேரணி, விருந்து, விழாக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம்  கூடக்கூடிய அவசியமற்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.

நாட்டில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை நேற்று 5,793 ஆக பதிவாகியுள்ளது. அதற்கு முந்தைய தினம் இந்த எண்ணிக்கை 6,849 ஆக இருந்தது. அதே சமயம் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாட்டின் கோவிட்-19 நோய்த் தொற்று வரலாற்றில் மிக அதிகமாக அதாவது 8,334 ஆக பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் 7,749 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.


Pengarang :