ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

செல்டேக் திட்டத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு- புதியவர்கள் பங்கேற்க ஊக்குவிப்பு

ஷா ஆலம், ஜூன் 22– செல்டேக் எனப்படும் சிலாங்கூர் இலக்கவியல் மின்-விநியோக ஒருங்கமைப்பு கடந்தாண்டு உருவாக்கப்பட்டது முதல் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தொழில்முனைவோர்  பங்கேற்று பயனடைந்துள்ளனர்.

சிறு வர்த்தகர்களுக்கு உதவும் சிலாங்கூர் அரசின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதை இந்த வரவேற்பு காட்டுவதாக செல்டேக் வர்த்தக மேம்பாட்டு பிரிவின் தலைமை நிர்வாகி முகமது பவுசான் இல்ஹாம்  கூறினார்.

வர்த்தகத் துறையில் புதிதாக ஈடுபடும்  தொழில்முனைவோர் இத்துறையில் ஈடுபட தாங்கள் ஊக்குவிப்பதாகவும் அவர் சொன்னார்.

செல்டேக் திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடக்கப்பட்டது. எனினும், கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை இலக்காக கொண்டு திட்டங்களை விரிவுபடுத்தினோம் என்றார் அவர்.

ஒராண்டு காலத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் பொருள்கள்ளை வாங்குவதற்கு இந்த தளத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மீடியா சிலாங்கூர் ஏற்பாட்டில் முகநூல் வழி நடைபெற்ற “சிலாங்கூர் மக்களுக்கு உதவும் தளம்“ எனும் தலைப்பிலான விவாத நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :