ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

நாடாளுமன்றம், சட்டமன்றம் விரைவாக கூட்டப்பட வேண்டும்- அரசாங்க, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை

ஷா ஆலம், ஜூன் 23–  நாடாளுமன்ற மற்றும் சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டம் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்ற மாட்சிமை தங்கிய பேரரசரின் உத்தரவை தாங்கள் வரவேற்பதாக சிலாங்கூர் மாநில அரசாங்க ஆதரவு கிளப் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறினர். .

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தைக் கூட்டுவதன் மூலம் அரசாங்க நிர்வாகத்தின் நடவடிக்கைகளை சரிபார்த்து சமன் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று அந்த கூட்டணி வெளியிட்ட கூட்டறிக்கை கூறியது.

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் மாநில மந்திரி புசார் வெளியிட்ட அறிக்கையை தாங்கள் வரவேற்பதாகவும் அந்த கூட்டணி தெரிவித்தது.

மாட்சிமை தங்கிய பேரரசர் மற்றும் மலாய் ஆட்சியாளர்களின் அறிவுறுத்தலுக்கேற்ப சிலாகூர் சட்டமன்றத்தைக் கூட்டும் மாநில அரசின் முடிவுக்கு முழு ஆதரவு கிடைக்கும் என்றும் அவ்வறிக்கை குறிப்பிட்டது.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றக் கூட்டங்கள் நடத்தப்படுவது மிக முக்கியமானதாகும். கோவிட்-19 நோய்த் தொற்றை ஒழிப்பதற்கு ஏதுவாக மக்கள் தொடர்பான விவகாரங்களை இங்கு விரிவான அளவில் விவாதிப்பதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அது கூறியது.

இந்த கூட்டறிக்கையில் சட்டமன்ற ஆதரவு கிளப் தலைவர் எலிசெபெத் வோங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ரிசாம் இஸ்மாயில் கையெழுத்திட்டிருந்தனர்.

 


Pengarang :