HEALTHMEDIA STATEMENTNATIONAL

தொழில் துறையினருக்கு தடுப்பூசி இலவசம்- கட்டணம் வசூலிக்க முதலாளிகளுக்குத் தடை

ஷா ஆலம், ஜூன் 25- தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தொழில்துறையிருக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் பங்கேற்றுள்ள முதலாளிகள்,   தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தவதற்கு உண்டாகும் நிர்வாக செலவுகளை அத்தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்ய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

தனியார் துறையினரைக் கொண்டு தடுப்பூசி மையங்களை ஏற்பாடு செய்வது மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கு தனியார் மருத்துவ துறையினரின் சேவையை பெறுவது போன்ற பணிகளுக்கு உண்டாகும் செலவுகளை முதலாளிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

“தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ், அனைத்து மலேசியர்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது என்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். தொழில்துறைக்கான தடுப்பூசித் திட்டத்திற்கு அதே கொள்கை பின்பற்றப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்“ என்றார் அவர்.

தனியார் மருத்துவர்களின் கீழ் செயல்படும் தடுப்பூசி செலுத்தும் மையங்களில் தடுப்பூசி செலுத்த  வருவோருக்கு கட்டணம் விதிக்கப்படாது. முன்பதிவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் தடுப்பூசி பெறுவதற்காக தனியார் மருத்துவர்களின் தடுப்பூசி மையங்களுக்கு வருவோருக்கு வழங்கப்படும் மருத்துவ ஆலோசனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அவர் சொன்னார்.

 


Pengarang :