ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மோரட்டோரியம் காலத்தில் கூட்டு வட்டி, அபராதக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்- நிதியமைச்சர் தகவல்

புத்ரா ஜெயா, ஜூன் 29- மக்கள் நலன் மற்று பொருளாதார மீட்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்  மோரட்டோரியம் எனப்படும் வங்கிக் கடனை திரும்பச் செலுத்துவதை தாமதப்படுத்தும் ஆறு மாத கால தவணையின் போது விதிக்கப்படும் கூட்டு வட்டி மற்றும் அபராதக் கட்டணத்தை வங்கிகள் தள்ளுபடி செய்யும் என நிதியமைச்ர் துங்கு டத்தோஸ்ரீ ஸப்ருள் அப்துல் அஜிஸ் கூறியுள்ளார்.

அண்மையில் வங்கிகளுன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது இவ்விவகாரம் எழுப்பப்பட்ட நிலையில் கூட்டு வட்டி மற்றும் அபராதக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய அவை இணக்கம் தெரிவித்ததாக அவர் சொன்னார்.

மேராட்டோரியம் காலத்தில் வட்டியை அதிகரிப்பது மற்றும் அபராதக்  கட்டணம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளில் வங்கிகள் ஈடுபட்டால் அது குறித்து புகார் செய்யும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

வருமான வேறுபாடின்றி அனைத்து நிலையிலான மக்களுக்கும் ஆறு மாத கால மோரட்டோரியம் சலுகை வழங்கப்படும் தகவலை பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் நேற்று அறிவித்தார். 


Pengarang :