ECONOMYHEALTHNATIONALPBT

2019 ஆம் ஆண்டு முதல் நாட்டில் 1,708 தற்கொலைச் சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், ஜூலை 1– கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு மே மாதம் வரை நாட்டில் 1,708 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தற்கொலை செய்து கொண்டவர்களில் 1,427 பேர் பெண்களாவர் 

சொந்தமாக உயிரை மாய்த்துக் கொண்டவர்களில் அதிகமானோர் பதின்ம வயதினர் என்று புக்கிட் அமான் குற்றபுலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அப்துல் ஜாலில் ஹசான்  கூறினார்.

பதினைந்து முதல் 18 வயதுக்குட்பட்ட 872 பேரும் 19 முதல் 40 வயதுக்குட்பட்ட 668 பேரும் இக்காலக்கட்டத்தில் தற்கொலை செய்து கொண்டதாக அவர் சொன்னார்.

கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ஜொகூரில் மிக அதிகமாக அதாவது 101 பேர் தற்கொலை செய்து கொண்ட வேளையில் சிலாங்கூரில் இவ்வாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை 117 பேர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு மே மாதம் வரை நாளொன்றுக்கு சராசரி இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது என்றார் அவர்.

குடும்ப பிரச்னை, மனஉளைச்சல் மற்றும் நிதி பிரச்னை ஆகிய மூன்று காரணங்களால் அதிக தற்கொலைகள் நிகழ்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


Pengarang :